இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நான் சிரித்துக் கொண்டே சில்லறை வேண்டாம் என்று புறப்படுவேன். O அந்திக்குறிக்கு ஆன இடம் உன் கடைதான் கல்லூரி நாட்களில் காளைப் பருவத்தில் செட்டி ஊருணிக்குச் சென்றிருக்கும் அந்தச் செந்தமிழ்த் தேன்மொழியாள் நயனங்கள் நல்வரவு கூற நான நாடி நிற்குமிடம் உன் கடைதான்! ○ 'கருத்துக்கள் வேறுபடலாம் அது பகைமை ஆகிவிடாது' என்றோர் வாசகம் காந்தி சொன்னதாய் எழுதித் தொங்கவிட்டிருப்பாய் ஒர் அட்டையில். காந்தி நேரு கஸ்தூரிபாய் கோடையும் வசந்தமும் 0 139