இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நின்று விடவில்லை - இப்போதும். O கலகம் மழைக் காலக் குடைக்காளான்களாய்த் தலைதூக்கி அழியும். புரட்சியோ எரிமலையாய் வெடித்துச் சர்வநாச சக்திகளையும் சாம்பலாக்கித் தடந்தெரியாமல் அழிக்கும். கூண்டில் அடைபட்டாலும் சிங்கம் சிங்கம்தான். எதிரில் தெரியும் இரும்புக் கம்பிகளை ஓங்கி அறையும் ஒரு சிங்கம் போல் சிலி - உக்கிரம் கொண்டிருக்கிறது இப்போதும், Ο தோழர் அலெண்டே, நீ தான் புரட்சிப் படையை நடத்துகின்றாய் இப்போதும். கோடையும் வசந்தமும் C 61