இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தூய மலர்கள் வாடவில்லை - இப்போதும். அவற்றின் சுகந்தம் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தென்கிழக்காசிய நாடுகளில் இன்னும் இன்னும்..... அகிலமெங்கும் பரவுகிறது. ○ மார்க்சியம் - உலக அரங்கில் ஒலிம்பிக் பந்தய ஒட்டக் காரன் போல் கம்பீரமாக வெற்றிச் சுடரை ஏந்தி முன் வருகிறது. முதலாளித்துவமோஒரு திருடனைப் போல் இருண்ட சந்து பொந்துகளிடையே உருவம் மறைத்து ஒடி ஒளிகிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் விசுவரூப மெடுத்து நிற்கும் கால கட்டமிது. கோடையும் வசந்தமும் O 63