பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடிப்புச் சுதேசியர் நாட்டிய மேடையைத் கடந்து செல்லக் களித்தேன் . ஒ. காலில் கொடுமுள் பாய்ந்தது - தன் கருத்தை முடித்தே ஓய்ந்தது நான் கதறினேனா? பதறினேனா? கிள்ளி எறிந்தேன், துள்ளி எழுந்தேன் தொடர்ந்தேன் நான் நடந்தேன் நான்...... தர்ம யுத்தம் நோக்கியே! Ο நான் நடந்து செல்லச் சிலிர்த்தேன் - பொய் நந்த வனத்தின் மலிந்தசிற் சுகங்களைக் கடந்து செல்லச் சிலிர்த்தேன் . ஒ. காலில் ஆணி குத்தியது - எனைக் கடுந்துன் பத்தால் வருத்தியது . நான் கலங்கினேனா?மயங்கினேனா? கிழித்தெறிந்தேன்; கிளர்ந்தெ ழுந்தேன் தொடர்ந்தேன் நான் நடந்தேன் நான்..... புதியசெங் கோட்டை நோக்கியே! ஜனசக்தி' கோடையும் வசந்தமும் 0 87