பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னம் நீ அசைந்து அசைந்து நட! பூமியெங்கும் வனப்பும் வசீகரமும் அணிவகுக்கட்டும். நீ கம்பீரமாய்ப் பற! வானமெங்கும் தூய்மையும் ஒளி வெள்ளமும் பாயட்டும்; பரவட்டும். நீதுது செல் வெப்பத்தில் புழுங்கிக் கிடக்கும் இதயங்கள் பரவச கங்கையில் மூழ்கி எழட்டும் வறண்ட ஆன்மாக்கள் இளந்தென்றலில் மிதக்கட்டும் கோடையும் வசந்தமும் 0 89