பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கோப்பெருந்தேவியர் பணிவுடன் தெரிவித்தனர். பாண்டி நாட்டில் சைவப் பேரொளி பொங்குமாறு தேவரீர் எழுந்தருள வேண்டும் என்று பணிவுடன் வேண்டி கின்றனர். தாவுக்கரசர் தடுத்தல் பாண்டிமாதேவியாரும் குலச்சிறையாரும் கூறி விடுத்த வேண்டுகோளைத் திருஞானசம்பந்தர் நிறை வேற்றத் திருவுளம் பற்றினர். உடனே அவர் தமது உள்ளக் கருத்தினை உடனிருந்த திருநாவுக்கரசரிடம் தெரிவித்தார். அது கேட்ட திருநாவுக்கரசர் திடுக் குற்றனர். அந்தோ! சமணர் எதற்கும் அஞ்சாத வன்னெஞ்சம் படைத்த வஞ்சகர் அன்ருே இளம் பிள்ளே யாராகிய ஞானசம்பந்தருக்கு யாது நேருமோ? என்று நெஞ்சம் பதைத்தனர். பெருமானே! விேர் இப்பொழுது மதுரை மாநகருக்கு எழுந்தருளல் இனிய தன்று; நாளும் கோளும் கல்லனவாக இல்லே' என்று அன்புடன் அவர்பால் சொல்லியருளினர். சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளுதல் திருநாவுக்கரசரின் அன்பு மொழிகளைக் கேட்ட சம்பந்தப்பெருமான் புன்முறுவல் பூத்தார். சிவனர் சேவடி வணங்கும் நமக்கு நாளும் கோளும் என்ன தீங்கு செய்ய இயலும்? எல்லாம் கல்லனவாகவே அமையும் என்று கூறிக் கோளறு பதிகம் பாடினர். பின்னர்த் திருநாவுக்கரசர்பால் விடைபெற்றுத் திரு மறைக்காட்டு இறைவனைப் பணிந்து முத்துச்சிவிகை யில் ஏறி மதுரைக்குப் புறப்பட்டனர். இடையில் உள்ள பல தலங்களையும் தரிசித்து வழிபட்டவாறே மதுரையை நெருங்கினர்.