பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுமாறன் தேவி 95. திருஞானசம்பந்தரை வரவேற்றல் அங்காளில் மதுரையைச் சூழ்ந்துள்ள ஆனைமலை முதலான எட்டு மலைகளிலும் வாழ்ந்த சமணர்கள் தீக்கனவும் தீக்குறியும் கண்டு திகைத்தனர். மங்கை யர்க்கரசியாரும் குலச்சிறையாரும் மங்கலக் களுக்களும் மகிழ்வூட்டும் கன்னிமித்தங்களும் கண்டு உவகை கொண்டனர். திருஞானசம்பந்தர் மதுரை நகரத்தின் எல்லேயை வந்தடைந்த நற்செய்தி கேட்ட மங்கையர்க் கர்சியார், குலச்சிறையாரிடம் சம்பந்தப்பெருமான எதிர்கொண்டு வணங்கி அழைத்து வருமாறு பணித் தார். குலச்சிறையார் நகரின் எல்லேயை நண்ணித் திருஞானசம்பந்தர் எழுந்தருளுவதைக் கண்கள் களி கூரத் தரிசித்து, அடியார் திருக்கூட்டத்தின் எதிரே விழுந்து வணங்கினர். அவரை அன்புடன் வரவேற்று முகமன் மொழிந்து அகமகிழ்வுடன் அழைத்துக் சென்றனர். ஆலவாய்க் காட்சி அவர்பால் நலம் உசாவி நல்வாழ்த்துக் கூறி யருளிய ஞானசம்பந்தர், இறைவன் எழுத்தருளும் ஆவலாய் எம்மருங்குள்ளது?’ என்று வினவினர். அது கேட்ட அடியவர் ஒருவர், அதோ தோன்றும் வான ளாவிய கோபுரத்துடன் குலவும் திருக்கோவிலே ஆலவாய் ஆகும்' என்று பணிந்து மொழிந்தார். உடனே திருஞானசம்பந்தர் தம் சிறு மலர்க் கைகளைக் குவித்து நிலமிசை கெடிது வீழ்ந்து வணங்கி எழுங் தார். மங்கையர்க்கரசி நாள்தோறும் பணிசெய்து பரவும் ஆலவாய் இதுதானே !' என்று வியந்து பதிகம் பாடியருளினர்.