பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கோப்பெருந்தேவியர் மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாள்தொறும் பரவப் பொங்கழல் உருவன் பூதகா யகன் கால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னெடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே ' இங்ங்ணம் ஆலவாய்ப் பெருமானைத் திருஞானசம் பக்தர் அகமுருகிப் பாடியருளிய அருந்தமிழ்ப் பதிகத் தில் மங்கையர்க்கரசியாராகிய நெடுமாறன் கோப் பெருங்தேவியை நெஞ் சார ப் போற்றி யுள்ளார். பாண்டிமாதேவியாரை ஆலவாய்ப் பதிகப் பாக்களில் அழகுறப் பாராட்டி யருளிய ஞானசம்பந்தர் திருக் கோவிலே அடைந்தார். ஆலவாய் அமர்ந்த அண்ணலே அங்கயற்கண்ணி தன்னெடும் இன்னிசைப் பதிகம் பாடிப் பரவிப் படிமிசை விழுந்து பணிந்தார். அவர் திருவாயிலே அடைந்த பொழுது அங்குத் தலைமேல் மலர்க்கை குவித்து வணங்கி நிற்கும் மங்கையர்க்கரசி யாரைக் குலச்சிறையார் ஞானசம்பந்தருக்குக் காட்டி ஞர். அவரைக் கண்டு பிள்ளையார் எதிர்செல்ல அரசி யாரும் எதிர்வந்து மலரடியில் விழுந்து வணங்கினர். சம்பந்தர் அரசியாரைப் பாராட்டுதல் பிள்ளையாரை வணங்கி எழுந்த வளவர்கோன் பாவையார் மகிழ்ச்சிப்பெருக்கால் வாய்குழறக் கண்ணிர் மல்க, அடியேனும் என் கணவரும் முன் செய்த தவம் என்கொல்' என்று கூறி கின்ருர். அதற்கு விடை பகர்வார் போலப் பிள்ளையார், அரசியாரை நோக்கிச், 'சுற்றிலும் பரசமயம் சூழ்ந்திருக்கவும் சிவத்தொண்டு