பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுமாறன் தேவி 97 புரிந்துகொண்டிருக்கும் தங்களைக் கண்டு செல்லவே வந்தோம் என்று அன்புரை அருளினர். பின்னர் அங்கு கின்ற அடியார் திருக்கூட்டத்திற்கெல்லாம் அருட்பார்வை செய்து முத்துச்சிவிகை ஏறி, அவர்க் கென அமைத்திருந்த திருமடத்தினே அடைந்து அங்கு எழுந்தருளினர். சமணர் சூழ்ச்சி மதுரைமா நகரைச் சூழ்ந்து வாழ்ந்து வந்த சமண ரெல்லாரும் அன்று இரவில் ஒன்று சேர்ந்தனர். சம்பந் தப்பெருமான் எழுந்தருளியிருந்த திருமடத்தில் சிவம் பெருக்கும் பேரொலி கிளர்ந்து எழுவதைக் கேட்டு வருக் தினர். மன்னவன் அரண்மனை அடைந்து சிவ வேதிய ராகிய திருஞானசம்பந்தரின் வருகையை அவனுக்கு அறிவித்தனர். அவ் வேதியச் சிறுவன் எங்களுடன் வாது செய்ய வந்துள்ளானம் ' என்று இகழ்ந்து பேசினர். பாண்டியனுடன் அச்சமணர்கள் சம்பந்த ருக்கு யாது கேடு சூழ்வதெனச் சூழ்ந்தனர். அவன் உறையும் மடத்திலே விஞ்சையால் தீயை உண்டாக்கு வோம்; அதைக் கண்டு அவன் அஞ்சி அகல்வான்' என்று துணிந்து மொழிந்தனர். திருமடத்தில் தீவைத்தல் ஞானசம்பந்தர் தங்கிய திருமடத்தில் தீ வைத் தற்கு அரசன் இசைவு பெற்ற சமணர், அங்குச் சென்று தங்கள் மந்திர வலியால் தழல் பற்றுமாறு செய்யப் பெரிதும் முயன்றனர். அவர்கள் மந்திரம் பயன் தாராமையால் தந்திரமாக நெருப்பைக் கொண்டு சென்று மடத்தில் பற்ற வைத்து மறைந்தனர். மடத்