பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கோப்பெருந்தேவியர் தின் ஒரு புறத்தில் திப் பற்றியதைத் தெரிந்த அடியார் விரைந்து அதனை அணைத்தனர். அச்செய்தியைத் திருஞானசம்பந்தருக்குத் தெரிவித்தனர். அது கேட்டு ஞானசம்பந்தர் வருந்தினர். என் பொருட்டு இவ் அடியார்கட்கும் அவலம் உண்டாயிற்றே என்று இரங்கினர். இச்செயலுக்குப் பாண்டியனும் இசைக் துள்ளாளுதலின் இதன் பயனே அவன் அடைவானுக! எனினும் அவனுக்குக் கேடு வராமல் நல்லறிவுகொளுத் தும் அத்துணையே இதன் பயனே எய்த வேண்டும்' என்று திருவுளம்பற்றினர். செய்ய னே திரு ஆலவாய் மேவிய ஐயனே!அஞ்சல் என்றருள் செய்எனப் பொய்ய ராம்.அம ணர்கொளு வுஞ்சுடர் பைய வேசென்று பாண்டியற் காகவே." என்று பைந்தமிழ்ப் பதிகம் பாடியருளினர். சம்பந்தர் தீயைப் பணித்தல் திருமடத்தில் பற்றிய தீயினைப் பையவே சென்று பாண்டியனேப் பற்றுமாறு பணித்தருளிய திருஞான சம்பந்தப் பெருமானின் திருவருள் திறத்தினைச் சேக் கிழார் தெய்வ மணக்கும் செய்யுளால் விளக்குகின்ருர், பாண்டிய நாட்டில் சைவ ஒளி பரப்பும் பொருட்டுப் பாண்டிமாதேவியாரின் வே ண் டுகோளே யேற்று மதுரைமாநகர் புகுந்தவர் திருஞானசம்பந்தர். அவர் வெங்கனலே விரைந்து சென்று வேந்தனைப் பற்றுமாறு ஏவியிருந்தால் அவன் இறந்தொழிவான். அரசன் இறந்தால் மங்கையர்க்கரசியாரின் மங்கலநாண் மறைக் தொழியும். அமைச்சராகிய குலச்சிறையார் கொண்ட அன்பு குலேயும், அரசன் செய்த திங்கின் பயனேத்