பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுமாறன் தேவி 99. தெரியாது போவான். அவன் மீண்டும் சிவநெறியடை யும் தவப்பேறு உடையவன். அதனால் அவன் தன் வெப்பு நோய் அகலுமாறு திருஞானசம்பந்தரால் வெண்ணிறு தீண்டி அணியப்பெறும் அரும்பேறுடை யான். இத்தனை உண்மைகளையும் இனிதுணர்ந்த ஞானச்செல்வராகிய சீர்காழிச்செல்வர் அவ் வெய்ய தீயினைப் பையவே செல்க' என்று அருளுடன் பகர்க் தருளினர். " பாண்டிமா தேவியார் தமதுபொற்பில் பயிலும்கெடு மங்கலகாண் பாதுகாத்தும் ஆண்டகையார் குலச்சிறையார் அன்பினாலும் அரசன்பால் அபராதம் உறுதலாலும் மீண்டுசிவ நெறியடையும் விதியிலுைம் வெண்ணிறு வெப்பகலப் புகவிவேந்தர் திண்டியிடப் பேறுடையன் ஆதலாலும் திப்பிணியைப் பையவே செல்க' என்ருர்.' இங்ங்னம் பையவே செல்க' என்ற மறை மொழிக்கு உரைவகுத்தருளிய சேக்கிழாரின் சீரிய புலமைத்திறம் பெரிதும் போற்றற்கு உரியதாகும். வேந்தனுக்கு வெப்புநோய் நிறைமொழியாளராகிய திரு ஞா ன சம் பக்தர் ‘பையவே சென்று பாண்டியற்கு ஆகவே' என்று. பகர்ந்தருளிய மறைமொழியால் பாண்டியன் உடம்பில் வெப்பு நோய் பரவியது. சமணர்கள் சம்பந்தப்பெரு மான் எழுந்தருளியிருந்த திருமடத்தில் தீ வைத்ததும் பாண்டியனுக்கு வெப்புநோய் பற்றியதுமாகிய செய்தி களைக் கேட்டு மங்கையர்க்கரசியார் அஞ்சி நெஞ்சம் பதைத்தார். திருஞானச்ம்பந்தருக்கும் உடன்வந்த அடியார்கட்கும் தீங்கொன்றும் நேராமையினைத்