பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கோப்பெருந்தேவியர் தெரிந்து மனம் தெளிந்தார். விரைந்து சென்று வேந்தனைக் கண்டார். குலச்சிறையாரும் வேந்த ஆணுக்கு ஏற்பட்ட வெப்பு நோயைக் கூர்ந்து கோக்கினர். சமணர் நோய் தீர்க்க முயலுதல் பாண்டியன் தன்னைப் பற்றிய வெப்பு நோயால் பெரிதும் வெதும்பினன். அவன் தழலிடைப்பட்ட புழுவென உழன்று சுழன்ருன். அவன் உடம்பிலிருந்து வீசிய வெப்பம் பக்கத்தில் அமர்ந்தவரையும் பற்றி வெதுப்பியது. அவனைக் கிடத்திய கதலிக் குருத்தும் கன்னித் தளிர்களும் காய்ந்து சாம்பின. கைதேர்ந்த மருத்துவரும் மெய் தேராது மெலிவுற்றனர். அரச னுக்கோ வெம்மை மேலும் மேலும் பெருகியது. சமணர்கள் உண்மை உணராது தங்கள் மந்திரங்களேக் கூறிப் பீலி கொண்டு தடவினர். அவர்தம் கைப்பீலி களும் பிரம்புகளும் காய்ந்து தீய்ந்தன. அருகனைப் பணிந்து வேண்டிக் குண்டிகை நீரைக் கொண்டு தெளித்தனர். அங்ர்ே அரசன் உடல் வெம்மை யைப் பெருக்கும் கெய்யாயிற்று. அரசன் அருகிருத்த சமணரை வெகுண்டு அகலுமாறு பணித்தான். அரசியார் வெப்பு நோயின் காரணம் விளம்புதல் இங்கிலையைக் கண்ட கோப்பெருந்தேவியாகிய மங்கையர்க்கரசியாரும் மதியமைச்சராகிய குலச்சிறை யாரும் பெரிதும் வருந்தினர். இரவில் திருஞானசம் பந்தருக்கு இவ் அமணர்கள் செய்த தீங்கே இத்தகைய இன்னலே விளேத்தது; அதனுல்தான் அவர்கள் தீர்க்க முயன்ருல் தீராது மேலும் மூளுகிறது' என்று தெளிங் தனர். இதனை அரசனுக்கு மெல்ல அறிவிப்போம்