பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுமாறன் கேவி 101 என்று இருவரும் பாண்டியனை அணுகி, ' இச் சமண் சமயத்து அடிகள்மார் சம்பந்தருக்குச் செய்த தீங்கா லேயே தங்கட்கு இவ் வெப்பு நோய் விளைந்தது ; இதற்குத் தீர்வும் அப்பெருமானது அருளேயன்றிப் பிறிதில்லே ' என்று பரிவுடன் பணிந்து இயம்பினர். மன்னன் மனம் இசைதல் - தேவியாரும் அமைச்சரும் தெளிந்து கூறிய மொழி கள் பாண்டியன் செவியகத்தே அமுதமெனப் பாய்ந் தன. அவன் சிறிதே உணர்வு பெற்று அச்செய்தியைச் சிந்தித்தான். உடனே அவர்களே நோக்கி, விேர் கூறும் அச்சிவ வேதியச் சிறுவரால் என் நோய் அகலு. மாயின் அதனை ஏற்பேன்; மேலும் என் பிணியைத் தீர்த்து வென்றவர் பக்கம் வீறுடன் சேர்வேன் ; அவரை அழைத்து வருக” என்று பணித்தான். திருமடத்தில் சம்பந்தரைத் தரிசித்தல் அரசன் உறுதிமொழிகேட்ட இருவரும் பெரு மகிழ்வுற்று, இனி நாமும் உய்ந்தோம் ; நம் நாடும் நன்கு உய்யும் , அரசனும் பிணி அகல்வான்; எங்கும் சைவப் பேரொளி பொங்கும்' என்று நினேந்தவராய் ஞானசம்பந்தர் எழுந்தருளிய திருமடத்தை அடைந் தனர். தங்கள் வருகையைப் பிள்ளையாருக்கு விண் ணப்பிக்குமாறு அடியவர்.பால் வேண்டினர். அவர் களும், அரசியாரும் அமைச்சரும் மடத்திற்கு வந்துள்ள செய்தியினைச் சம்பந்தர் திருவடி பணிந்து தெரிவித் தனர். பிள்ளையார் அவர்கள் வருகைக்கு மகிழ்ந்து திருவருள் செய்ய, மடத்தினுள் புகுந்து ஞானமே திரு வுருவாய் எழுந்தருளிய பெருமானேத் தரிசித்தனர். அவர்கள் அங்குக் கண்ட காட்சியினைத் தெய்வப்