பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கோப்பெருக்கே வியர் புலமைச் சேக்கிழார் பெருமான் சிறந்ததொரு சொல் லோவியமாக நமக்கு வரைந்து காட்டியுள்ளார். ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணேயை வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுங்தைத் தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்.' - -பெரியபுராணம் : எஉஅ. ஞானச்செல்வரின் திருக்கோலம் இளஞாயிறு போன்று ஞானக்கதிர் பரப்பி எழுந் தருளிய திருஞானசம்பந்தர் பரஞானமாகிய மெய் யுணர்வின் வடிவாக விளங்கினர். அபரஞானமாகிய நூலறிவிற்குச்சிறந்த துணையாகத் திகழ்ந்தார். பதினறு கலைகளையுடைய பனிமதியைப் போன்று பதினறு ஆண்டுகளே பருவுடலுடன் வாழ்ந்த பெருமானுர் மண்ணில் ஒளிரும் மதிக்கொழுந்தாகத் தண்ணுெளி விசியிருந்தார். கொன்றையணிந்த குளிர்சடைப் பெம் மானின் புகழ் தொடுக்கும் எழுவகை இன்னிசையின் திருவடிவாய் இலங்கினர். இங்ங்னம் ஞானப் பேரொளி வீசிக் கானச் சீரொலி எழுப்பும் கருணைத் திருவுருவை அரசியாரும் அமைச்சரும் கண்களிப்பக் கண்டு கழிபேருவகை கொண்டனர். அவர்தம் திருவடி களில் விழுந்து வணங்கினர். வேந்தன் வெப்புநோய் தீர்த்தருள வேண்டுதல் திருஞானசம்பந்தர் அவ் இருவரையும் அருளுடன் எழுந்திருக்கப் பணித்து, ஏதும் தீங்குளதோ? என்று