பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுமாறன் தேவி 103 வினவினர். அது கேட்ட அமைச்சர், 'சமணர்கள், தங்கட்குச் செய்த வஞ்சனே அறிந்து நெஞ்சழிந்தோம். சிவனர் அருளால் தங்கள் திருமேனிக்குத் தீங்கு நேரா தென்த் தெளிந்தோம். ஆனல் அவர்கள் செய்த தீமை அரசனுக்கு வெப்பு நோயாக வந்து வெதுப்புகிறது. தீயராகிய சமணரால் அது தீர்தற்கு இல்லை. தாங்கள் எழுந்தருளி வேந்தனே வருத்தும் வெப்பு நோயைத் தணித்து வெய்யராம் சமணரை வென்றருளவேண்டும். அவ்விதம் செய்தருளினல் அரசரும் யாங்களும் உய் வோம்” என்று குறையிரந்து பணிந்து நின்றனர். சம்பந்தர், மன்னன் மாளிகை சார்தல் இருவரின் வேண்டுகோளையும் அன்புடன் ஏற் றருளிய சம்பந்தர், விேர் அஞ்சல் வேண்டா ; இன்று யாம் விேர் இன்புறுமாறு சமணரை வென்று அரசனை வெண்ணிறு அணிவிப்போம்” என்று புன்முறுவ லுடன் புகன்றருளினர். பின்னர் ஆலவாய்த் திருக் கோவிலே அடைந்து அரனர் திருவடி பணிந்து, ஞாலம் நின்புகழே மிகவேண்டும், தென் ஆலவாயில் உறையும்எம் ஆதியே.” என்று பாடிப் பரவினர். சிவனடியார் திருக்கூட்டம் புடைசூழ்ந்து வர, முத்துச்சிவிகையில் ஏறி முத்தமிழ் வளர்க்கும் பாண்டியன் மாளிகை அடைந்தார். குலச் சிறையார் முன்சென்று, கொற்ற வேந்தனுக்குச் சம்பந்தர் வருகையைச் சாற்றினர். அச்செய்தி கேட் டதுமே அரசனுக்கு வெப்புநோயின் துன்பம் சிறிது விலகியது. தலைப்பக்கமாகப் பொன்னணே அமைக்கப் பணித்து அவரை எதிர்கொண்டு அழைத்துவர ஏவினன்.