பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுமாறன் தேவி 105. சம்பந்தரும் சமணரும் பிணி தீர்க்க முயலுதல் பாண்டியன் இரு திறத்தாரையும் பார்த்து, விேர் எனது நோயைத் திர்ப்பதன் வாயிலாக நுங்கள் தெய்வத் திருவருள் திறத்தைத் தெளிவிக்கவேண்டும்: எனது நோய் தீர்த்தவரே வாதில் வென்றவராவீர்” என்று இயம்பினன். அது கேட்ட சமணர், "நாங்கள் உமது இடப்பக்க வெப்பு நோயை ஒழிப்போம்” என்று கூறிப் பீலிகொண்டு தடவினர். அப்பொழுது அரசனது கோய் இரு மடங்காகப் பெருகியது. ஞானசம்பந்தர், ஆலவாய் அண்ணல் வெண்ணிறே மருந்தும் மந்திரமும் ஆகும் என்று திருற்ேறுப் பதிகம் பாடியருளினர். பின்பு, தம் சிறுமலர்க் கரத்தால் திருநீறு எடுத்துப் பாண்டியன் வலப்பக்கத்தே நலம்பெறத் தடவினர். உடனே அப்பக்கம் வெப்பு நோயின் வேதனை நீங்கிக் குளிர்ந்தது. இடப்பக்கம் முன்னேயினும் பன்மடங்கு வேதனையால் வெதும்பியது. வேந்தன் உடம்பில் வெப்பமும் தட்பமும் ஒருங்கே குடிபுகுந்தாற் போன்று விளங்கியது. சம்பந்தர் நோய் தீர்த்தருளுதல் இந்நிலையை உணர்ந்த மன்னன், "இஃது என்ன வியப்பு! ஒரே காலத்தில் வெய்ய நரகிலும் பேரின்ப விட்டிலும் இருப்பது போல் அன்ருே இருக்கிறது! ஆலத்தையும் அமுதையும் அருந்துவது போல் அன்ருே இருக்கிறது' என்று வருக்தி மொழிந்தான். அங்கிருந்த சமணரை நோக்கி, விேர் தோற்றீர்கள். இவ்விடத்தை விட்டு அகலுங்கள்' என்று கோபத்துடன் கூறினன். பிணிநீக்கிய பெருமானே நோக்கிச், 'சிவனருள் பெற்ற செல்வரே! தாங்கள் எனது உடலின் இடப்பக்கத்து கோ.-8