பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோயையும் தீர்த்தருள வேண்டும்; என்னுல் அவ் இன்னலைப் பொறுக்க இயலவில்லை' என்று பணிவுடன் இயம்பினன். ஞானசம்பந்தர் மீண்டும் தமது திருக்கரத்தால் திருநீற்றை எடுத்து ஆலவாயண்ணல் திருவருளே ச் சிந்தித்து அரசனது இடப்பக்கங் தட வினர். அவனது இடப்பக்கமும் வலப்பக்கத்தைப் போன்று நலம்பெற்றுக் குளிர்ந்தது. அரசன் உவகை யுடன் சம்பந்தரைக் கைகூப்பி வணங்கிப், பெரு மானே ! உய்ந்தேன் உய்ந்தேன்!” என்று பேசின்ை. அனல் வாதம் அது கண்ட சமணர் செய்வது அறியாது திகைத் தனர். சிறிது சிந்தித்து நெருப்பிலுைம் நீரினலும் வெல்லுவதென்று உறுதி கொண்டனர். சம்பந்தரும் அவர்களே நோக்கி, நுங்கள் சமய உண்மையினை நுவ லுங்கள்!' என்றனர். அவர்கள், 5ம் சமய உண்மை யின் திண்மையைக் கண்களால் காணுமாறு நெருப் பிலும் நீரிலும் இட்டு ஒட்டுவோம்' என்றனர். சம்பந்தர் அதற்கு இசைந்தருளினர். ஆனல் வேந்தனே சமணரை வெகுண்டு நோக்கி, விேர் எனது வெப்பு நோய் தீர்க்க முடியாதுதோற்றீர்! இனி என்ன வாது?" என்ருன், அரசனது சொல்லேயே வினவாகக் கொண்ட அச்சமணர், எங்கள் சமய உண்மைகளே ஏட்டில் எழுதித் தீயினும் நீரினும் இட்டு கிலே நாட்டுவோம்” என்றனர். அங்ங்னம் இருதிறத்தாரும் கொடுத்த ஏடுகளை முதற்கண் நெருப்பில் இட்டனர். சம்பந்தர் எழுதித் தந்த ஏடு நெருப்பில் எரியாது பசுமையாய் ஒளிவிட்டு இலங்கியது. சமணர் இட்ட ஏடோ சாம்ப லாயிற்று.