பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுமாறன் தேவி 109 உத்தமச் சிவநேசன் ஆயினன். பெரிய புராணம் பேசும் அரிய சிவனடியார்கள் அறுபத்துமூவருள் அவனும் ஒர் அடியவகை எண்ணப்பெற்ருன். அவனையும் பாண்டி நாட்டையும் பரசமயத்தினின்று காத்த கோப்பெருந்தேவியும் ஓர் அடியவராகக் கொண்டு போற்றப் பெற்ருர். அவருக்குத் துணையாக இருந்த அமைச்சர் பெருமானும் நாயனரென கயங் தேத்தும் பெருமையுற்ருர். சேக்கிழார் பாராட்டு இத்தகைய கோப்பெருந்தேவியைச் சேக்கிழார் பெருமான், எங்கள் தெய்வம் என்றும், பாண்டியர் குலத்தின் பழியைத் தீர்த்த தெய்வப் பாவை என்றும், சம்பந்தர் திருவருளால் கன்னி நாட்டில் வெண்ணிற் ருெளி பரவுமாறு செய்த திருமகளார் என்றும் தெய்வ மணக்கும் செய்யுளால் பாராட்டியுள்ளார். மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம் வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி செங்கமலத் திருமடங்தை கன்னி நாடாள் தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை எங்கள் பிரான் சண்பையர்கோன் அருளி ேைல இருந்தமிழ் கா(டு) உற்றஇடர் நீக்கித் தங்கள் பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னுரைப் போற்றுவார் கழல்எம்மால் போற்ற லாமே !’ கன்னி நாட்டில் வெண்ணிற்றின் பேரொளி பரப் பிய பெருந்தேவியாரின் அரும்புகழைப் பேணியுரைப் போர் மிக்க பேறு பெற்றவராவர்; பாண்டிமாதேவி யின் சிறப்பினேப் பகர்தல் எளிதாகுமோ? என்று பரவும் சேக்கிழாரின் பத்தி மாண்டை என்னென்பது!