பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 0. வரதுங்கன் தேவி பாண்டியர் குலத் தோன்றல்கள் ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னர்த் தென்பாண்டி நாடாகிய திருநெல்வேலிச் சீமையைப் பாண்டியர் குலத்தோன்றல்களாகிய இரு மன்னர்கள் அரசு புரிந்து வந்தனர். அவருள் மூத்தவன் வரதுங்கராமன்; இளே யவன் அதிவீரராமன். இவர்கள் இருவரும் கொற் கையை ஆண்ட குலசேகரன் என்னும் கொற்றவன் பெற்ற மக்களாவர். இராமர் இருவரின் கலே நலம் கொற்கை வேந்தனகிய குலசேகரன் தன் மக்களே அக்காலத்தில் தக்க பெரும் புலவராய் விளங்கிய நிரம்பவழகிய தேசிகர் என்பார்பால் தமிழ் நூல்களேப் ப்யிலுமாறு செய்தான். ஆன்று அவிந்து அடங்கிய அருந்தமிழ்ப் புலமைச் சான்ருராகிய தேசிகர்பால் பழந்தமிழ் நூல்கள் பலவற்றையும் கற்றுணர்ந்த காவலன் மக்கள் இருவரும் கற்றவர் வியக்கும் கவிஞர் களாக விளங்கினர். இலக்கிய இலக்கணங்களைக் கலக்க மறக் கற்றறிந்த காரணத்தால் அவர்கள் அரிய நூல் களே ஆக்க வல்ல பெரிய புலவர்களாயினர். அரச குமாரர்களின் தனியாட்சி குலசேகரன், புலமை நலங்கனிந்த மக்கள் இரு வர்க்கும் தன் காட்டைப் பிரித்துக் கொடுத்துத் தனி யாட்சி செலுத்துமாறு செய்தான். மூத்தவனகிய வரதுங்கராமன் நெல்லே காட்டிலுள்ள கரிவலும் வந்த கல்லூரைத் தலைநகராகக் கொண்டு அங்ககரைச் சூழ்ந்த