பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாதங்கன் கேவி 11 i. நிலப்பகுதியை ஆண்டு வந்தான். இளையவனகிய அதி வீரராமன் தென்காசித் திருநகரைத் தலைநகராகக் கொண்டு அதைச் சூழ்ந்த நிலப்பகுதியினைப் புரந்து வந்தான். - அதிவீரராமன் காவியம் அமைத்தல் அதிவீரராமன் அருந்தமிழ்ப் புலமை பெற்ற தோடு வடமொழி நூல்களையும் கற்றுணர்ந்தான். இரு மொழிகளிலும் உள்ள அகத்துறை இலக்கியங்களே அவன் ஆர்வமுடன் கற்று இன்புற்ருன். தான் பெற்ற இன்பத்தை மற்றவர்களும் பெற்று மகிழுமாறு செய்யப் பேராவல் கொண்டான். அதனல் காதற் சுவை கனிந்தொழுகும் காவியம் ஒன்றைப் படைக்க விரும்பினன். களனுடைய வரலாற்றை கற்றமிழ்ப் பெருங்காவியமாகப் பாடுதற்கு முற்பட்டான். வட மொழியில் ஹர்ஷகவி இயற்றிய கைவு தம் என்னும் நன்னூலையும், தமிழில் புகழேந்தியார் வகுத்துள்ள நளவெண்பா என்னும் நயந்தரு நூலேயும் உளங் குளிரப் பலகால் ஒதினன். பன்னூல்களையும் கற்று ணர்ந்த தனது புலமையாகிய இன்னமுதத்தை அவ் இரு நூல் கருத்துக்களுடன் குழைத்தான். புலவர்க்கு ஒளடதம்' என்று போற்றத் தக்க நைடதம் என்னும் காவியத்தைப் படைத்தான். காவியத்தைத் தமையனிடம் காட்டல் காவியம் இயற்றிய காவலனாகிய அதிவீரராமன் தனது கற்றமிழ்ப் படைப்பாகிய நைடதத்தைத் தன் தமையனுகிய வரதுங்கராமனிடம் கொண்டு கொடுத் தான். அதனைப் படித்துத் தனது கருத்தை அறி