பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாதுங்கன் தேவி 113 இத்தகைய வரதுங்கராமன் தம்பியின் மொழி கேட்டுத் தயக்கமுற்ருன். சிறிது நேரம் கழித்துத், 'தம்பி! நின் வளமான புலமையை நின்னைப் போன்ற ஒரு மன்னன் வரலாற்றைப் பாடுதற்கோ பயன் படுத்தினே! பிறவா யாக்கைப் பெரியோனகிய நீல மணிமிடற் றிறைவனது நீள்புகழைப் பாடுதற்குப் பயன்படுத்தினுல் அச்செயல், மாருத பேரின்பத்தைப் பெற்று மகிழ்தற்கு உற்ற காரணம் ஆகுமே ' என்று சொல்லி இரங்கினன். காவியத்தை மனைவியிடம் காட்டுமாறு கூறுதல் பின்பு, வரதுங்கன் தம்பியை அன்புடன் நோக்கித் 'தம்பி நின் அண்ணியும் அருந்தமிழ்ப் புலமையுடை யாள் அன்ருே அவள் எந்த நேரமும் அந்தப்புரத்தில் செந்தமிழ் நூல்களிலேயே தன் சிந்தையைச் செலுத்திக் கொண்டிருக்கிருள். கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என்று அவள் இடையருது ஒதி வரும் நூல்களுக்கு ஒரு கணக்கே இல்லை. அத் தகைய தமிழ் வித்தகியாகிய நின் அண்ணியிடம் இக் நூலைக்கொண்டு கொடுப்பாய். அவள் சில நாட்களில் இதனேப் படித்துச் சிறந்த மதிப்புரை வழங்குவாள்' என்று கூறி விடை கொடுத்தான். அண்ணியிடம் நூலேக் காட்டுதல் தமையன் கூறியவாறே தம்பியாகிய அதிவீர ராமன் தனது நூலே அண்ணியாரிடம் கொண்டு காட்டின்ை. இந்நூலைப் படித்துத் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்’ என்று வேண்டினன். மைத் துனக் கேண்மையனுகிய மன்னன் தந்த செந்தமிழ்