பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 கோப்பெருந்தேவியர் நூலே மனமுவந்து கையில் வாங்கினுள் வரதுங்கன், தேவி. அரசே! விேர் இரு மொழியும் வல்ல பெரும் புலவர். யானே தமிழ் ஒன்றே ஒரளவு கற்றவள். இன்னும் யான் தமிழில் கல்லாத நூல்கள் கணக்கி, றந்தவை. அங்ங்ணமிருக்கச் சிற்றறிவுடைய யானே நுமது நூலுக்கு மதிப்புரை வழங்கத் தகுதியுடை யேன்; எனினும் நுமது விருப்பை நிறைவேற்ற வேண்டுவது என் கடமை; சில நாட்களில் இதனைச் செவ்விதின் ஒதிச் சிறப்பினை உணர்ந்து விரிப்பேன்’ என்று விளம்பினுள். அண்ணி அனுப்பிய மதிப்புரை தமிழ்ப் புலமை சான்ற அண்ணியாரிடம் தன் நூலேக் கொடுத்து விடை பெற்ற வேந்தனகிய அதி வீரராமன் தனது தலைநகரமாகிய தென்காசியை அடைந்தான். சில நாட்களில் கரிவலம் வந்த நல்லூரி லிருந்து வரதுங்கன் தேவியார் தந்தனுப்பிய ஒலேயுடன் துாதன் ஒருவன் தென்காசியை வந்தடைந்தான். அரசனகிய அதிவீரராமன் மாளிகை அடைந்து வாயிற் காவலர்பால் தன் வரவினை அறிவித்தான். அரசன் உத்திரவைப் பெற்று அரண்மனையுள்ளே புகுந்த துாதன், அரசனை வணங்கித் தான் கொண்டு வந்த ஒலேயைப் பணிவுடன் கொடுத்தான். இது தங்கள் அண்ணியார் அன்புடன் அனுப்பிய திருமுகம்' என்று சொல்லி நின்ருன். - அவ் ஒலையைக் கையில் வாங்கிய அதிவீரராமன் ‘அண்ணிய்ார் நம் நூலைப் பற்றிய எண்ணத்தை இத்துணை விரைவில் அறிவித்து விட்டாரே!' என்ற மகிழ்வுடன் ஒலையை விரித்து நோக்கினன். நுமது