பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதுங்கன் தேவி 115. நூல் வேட்டை நாய் ஓடி இளைத்தது போன்றும், கரும்பினை அடியினின்று சுவைத்தது போன்றும் இருக்கிறது. என்று அவ் ஒலேயில் எழுதியிருந்தது. நைடதக் காவியம் தொடக்கத்திலிருந்து நடுப்பகுதி வரை மிகவும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் கற்பவர் கருத்தை இழுத்துச் செல்லும் வேகமான கதைப் போக்குடையதாகவும் விளங்குவது. பிற் பகுதியோ அத்துணை வேகமோ விறுவிறுப்போ இன்றிக் கதை தளர் நடையிட்டுச் செல்லுவது. இந்த உண்மையைப் புலப்படுத்தவே வரதுங்கன் தேவி, வேட்டை நாய் ஒடி இளேத்தது போன்று இருக்கிறது" என்றும் கரும்பினை அடிப்பாகத்தினின்று கறித்துச் சுவைத்ததற்கு ஒப்பாகும்' என்றும் குறிப்பிட்டாள். அதிவீரராமன் கொதித்தெழுதல் அண்ணியார் அனுப்பிய ஒலையைப் பன்முறை படித்துப் படித்துப் பார்த்தான் அதிவீரராமன். அவனுக்கு உள்ளம் ஒரு நிலையில் இல்லை. கோப்பெருங் தேவி கொடுத்த மதிப்புரை அவனுக்குப் பழிப்புரை யாகத் தோன்றியது. அண்ணனும் அண்ணியும் வேண்டுமென்றே தன்னை இகழ்ந்ததாக அதிவீரராமன் எண்ணினன். அவன் உள்ளத்தில் சினத்தி பொங்கி எழுந்தது. உடனே தமையனைக் கொன்ருெழிக்க வேண்டும் என்று கொதித்தெழுந்தான். அதிவீரராமன் புலமைச் செருக்கு அதிவீரராமன் தன்னைப் பாடிப் பரிசில் பெறு தற்கு வரும் தமிழ்ப் புலவர்களின் புலமையைப் பலவாறு ஆராய்வான். அவர்கள் புலமையில் ஏதேனும் குறை காணுவாயிைன் அவர்கள் தலையில்