பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கோப்பெருந்தேவியர் குட்டிக் குற்றமறக் கற்றுக் கவிபாடுக!' என்று இடித் துரைத்து அனுப்புவான். அங்ஙனம் புலவரை எல் லாம் அடக்கும் பெரும்புலமையாளனுகிய அவ் அரசன் தன் பிள்ளேமைச் செயலால் பிள்ளைப் பாண்டியன்' என்றே சொல்லப் பெற்ருன். அதனுல் புலவர் ஒருவர், குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங் கில்லே' என்று கட்டுரைத்தார். அதிவீரராமன் போருக்குப் புறப்படுதல் இத்தகைய பிள்ளைப் பாண்டியன் தனது நூலைப் பிறர் குற்றமுடையதெனப் பேச மனம் பொறுப் பானே? அதிலும் ஒரு பெண் 'துமது நூல் வேட்டை காய் ஒடி இளேத்தது போன்றுள்ளது என்று இகழ்ந் துரைக்க அவ்இழிவைக் கேட்டு வாளா இருப்பனே? உள்ளம் கொதித்தெழுந்த அதிவீரராமன் போர்க் கோலம் புனைந்து தன் படைகளைத் திரட்டினன். அவன் நால்வகைப் படையுடனும் கரிவலம் வந்த கல்லூரின் எல்லேயை வந்தடைந்தான். அங்கு கின்று போர் முரசை முழக்கினன். தமையனுக்குத் தனது வரவைத் தூதர் வாயிலாகத் தெரிவித்தான். வரதுங்கன் சிவனைப் பணிதல் நகர்ப்புறத்தே போர் முரசு முழங்குவதைக் கேட்ட வரதுங்கராமன் அமைச்சரையும் படைத் தலைவரையும் அழைத்துப் போருக்குரிய காரணத்தை ஆராயுமாறு பணித்தான். அவர்கள் கோப்பெருக் தேவியின் ஒலேயால் வந்த விளைவே இஃதென அறிக் தனர். அதனே அரசனுக்கு அறிவித்தனர். அது கேட்ட வரதுங்கன் அமைச்சரை அனுப்பித் தம்பியை