பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கோப்பெருந்தேவியர் பேகனைப் பிரிந்த கண்ணகி கடையெழு வள்ளல்களுள் ஒருவனகிய பேகனது பெருமாளிகைக்குக் கபிலராகிய கவிஞர் சென்ருர். அங்குப் பேகன் இல்லை. அவன் மனைவியாகிய கண்ணகி ஒருத்தியே அப் பெருமாளிகையில் தனித் திருந்தாள். கபிலர் தமது வருகையை உள்ளிருப் பார்க்கு அறிவிக்குமாறு வாயிற் காவலரை வேண்டி னர். சிறிது நேரத்தில் வாடிய முகமும் வழிந்திழியும் கண்ணிரும் உடையாளாய்ப் பேகனின் பெருமனைக் கிழத்தியாகிய கண்ணகி, மாளிகை வாயிலில் வந்து நிற்ற இலக் கண்டார். அவளது கலக்கத்திற்குக் காரணம் யாதெனக் கனிவுடன் வினவினர் கபிலர். அதற்கு அவள், 'புலவர் பெருமானே! என் தலைவராகிய பேகன் இம் மாளிகையில் என்னுடன் வாழுதலே வெறுத்து, கல்லூர்ப் பரத்தை ஒருத்தியுடன் வாழ் கிருர். அதனல் எனது மனே நோக்கி வரும் விருந் தினரைப் பேணவியலாது பெரிதும் கவல்கின்றேன்,' என்று மறுமொழி பகர்ந்தாள். பாரி மகளிரும் பைந்தமிழ் மூதாட்டியாரும் பறம்புமலைத் தலைவனுகிய பாரியின் மகளிர் இரு வரும் தந்தை இறந்தபின் தமிழ்ப் புலவராகிய கபிலர் பெருமானுடன் தம் காட்டைவிட்டகன்றனர். அவர் அம் மகளிர்க்குத் தக்க மனளரைத் தேடி மணம் புரிந்து வைத்தற்காகப் பெரிதும் முயன்ருர், அப் பாரி மகளிர் தங்கியிருந்த சிறுமனேக்குச்செந்தமிழ் மூதாட்டி யாராகிய ஒளவையார் ஒருநாள் பெருமழையில் கனேந்து கொடும்பசியுடன் குறுகினர். அவரைப் பாரி மகளிர் அன்புடன் வரவேற்றுத் தம்மிடம் இருந்த சிற்ருடை