பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. மன்னர் குல மகளிர் மன்னரும் மகளிரும் பழந்தமிழ் நாட்டைச் சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தர்கள் ஆண்டு வந்தனர். இவரையன்றிக் குறுநில மன்னர்களும் சிறுசிறு நிலப் பகுதிகளே ஆண்டு வந்தனர். இம் மன்னர்கள் தத்தம் தகுதிக்கேற்ற மன்னர் மரபில் தோன்றிய மகளிரையே மணந்து மகிழ்ந்தனர். அம் மகளிர்பால் தமிழகத்திற் குரிய விருந்துாட்டும் பெருந்தகைமையும் கற்பென்னும் பொற்பும் இனிதின் விளங்கின. இவையன்றி மறக்குடி மகளிர்க்குரிய வீர நெஞ்சமும் தம் கணவராகிய வேந்தர்க்கு வேண்டுழி அரசியல் அலுவல்களில் ஆய். வுரை கூறும் அறிவுத் திறனும் அவர்கள் ஒருங்கே பெற்று விளங்கினர். அம் மகளிரிற் சிலர் கவி பாட வல்ல புலமையாளராகவும் திகழ்ந்துள்ளனர். முன்னத் தமிழ் மன்னர்கள் புலவர்களை மகிழ் வுடன் வரவேற்று உபசரிக்கும் புரவலர்களாக இருந்து வந்தனர். அவர்கள் தம்மை நாடிப் புகழ் பாடி வந்த புலவர்க்கு உளங்குளிர யானைக் கன்று வளநாடு முதலிய சிறந்த பலவகையான பரிசுகளே வழங்கி இன் புற்றனர். ஈத்துவக்கும் இன்பத்தின் எல்லே கண் டனர் பண்டைத் தமிழ் மன்னர்கள். ஆதலின் மன்ன ரைக் காணவந்த பாணரையும் பைந்தமிழ்ப் புலவரை யும் அம் மன்னரைச் சார்ந்த மகளிர்கள் தகவுற வர வேற்று உணவூட்டி மகிழ்வுறுத்தும் மாண்பின ராகவே இருந்தனர். -