பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கோப்பெருந்தேவியர் என்பது அவரது தமிழ் மறையாகும். செல்வத்தை ஈட்டி இல்வாழ்வு நடத்துவதெல்லாம் விருந்துாட்டும் பெருந்தகைமைக்கே என்று பேசினர் அப் பெரு நாவலர். கற்பரசியாகிய கண்ணகி, தன் கணவனைப் பிரிந்து வாழ்ந்த நாளில் விருந்தோம்பும் சிறந்த அறத்தைச் செய்ய முடியாது போயிற்றே என்பதற்காக உளங் கரைந்துருகினள். இலங்கை வேந்தகிைய இராவண ல்ை அசோக வனத்தில் சிறை வைக்கப்பெற்ற சீதை, இராமனை கினைந்து உள்ளம் நெகிழ்பவள், என்னைப் பிரிந்திருக்கும் என் நாயகன் தன் உறையுளுக்கு விருக் தினர் வந்தால் அவரை உபசரித்தற்கு யான் இல்லா மையால் என்ன அல்லற் படுகின்ருனே' என்று எண்ணி யெண்ணி ஏங்கினுள். இவை போன்ற மகளிர் வாழ்வு நிகழ்ச்சிகளெல்லாம் தமிழக மகளிர் விருந்தோம்பலைத் தலையாய அறமாகக் கொண்டவர் என்பதை கன்ருக விளக்குவனவாகும்.