பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக மகளிர் 5 சீத்தலேச்சாத்தனர். இம் மூவகைக் கற்பிற்கும் எடுத் துக்காட்டாகப் பழந்தமிழ் நாட்டில் பற்பல மகளிர் விளங்கியுள்ளனர். கற்புடை மகளிர் மூவர் சிலப்பதிகாரம் குறிப்பிடும் பாண்டியன் நெடுஞ் செழியனுடைய கோப்பெருந்தேவி, தன் கணவயை பாண்டியன் மாண்டான் என்பதை உணர்த்ததும் அந்த இடத்திலேயே ஆவென உயிர்த்து ஆவி நீத்தாள். அவள் தலைக்கற்பிற்குத் தக்கதோர் எடுத்துக்காட்டா வாள். பூதப்பாண்டியன் இறந்த செய்தி அறிந்த அவன் தேவியாகிய பெருங்கோப்பெண்டு தியுட் பாய்ந்து மாய்ந்தாள். அவள் இடைக்கற்பிற்கு ஏற்ற தோர் எடுத்துக்காட்டாவாள். பெற்ருேரால் கணவ ராகத் தேர்ந்து உறுதி செய்யப்பெற்ற கலிப்பகையார் போர்க்களத்தில் உயிர் துறந்த பின், திலகவதியார் அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி இம்பர் மனத்தவம் இருந்தார். இவ் அம்மையார் கடைக் கற்புக்குத் தக்க எடுத்துக்காட்டாவார். விருந்துளட்டும் பெருந்தகைமை இங்ங்னம் கற்பினைக் காத்தொழுகிய மகளிர் இல் லறத்தில் விருந்து போற்றும் சிறந்த பண்பினராய்த் திகழ்ந்தனர். இல்லற நெறிகளே வகுத்துரைக்கும் வள்ளுவரும் இல்வாழ்வில் போற்றத் தக்க தலையாய அறம் விருந்தோம்பலே என்பதை இனிது விளக்கி யுள்ளார். - இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு."