பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கோப்பெருந்தேவியர் பெறுவாள். இங்ங்ணம் பெற்ருேரும் உற்ருேரும் கண வனும் கற்றுக்கொடுக்க அதல்ை மனையற நெறிகளை அறிந்தொழுகும் மகளிரின் ஒழுக்க நெறியே கற்பெனப் படுவதாயிற்று. இத்தகைய கற்பிற் சிறந்த மகளொருத்தியை மனேவியாகப் பெறுதலே ஆடவனுக்குப் பெறலருஞ் செல்வமாகும். அவளினும் பெறத்தக்க பேறு வேருென் றில்லை என்றே கூறுகிருர் திருவள்ளுவர். - பெண்ணிற் பெருங்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்.' என்பது அவர் வாய்மொழியாகும். இங்ங்னம் மக விர்க்கு மாண்பு தரும் கற்பினை மூவகையாகப் பிரிப்பர் மூதறிஞர். மூவகைக் கற்பு தலைக்கற்பு, இடைக்கற்பு, கடைக்கற்பு என்னும் மூவகையான கற்பினையும் சீத்தலைச்சாத்தனர் என் னும் செந்தமிழ்ப்புலவர் தம் படைப்பாகிய மணி மேகலைக் காவியத்தில் தெளிவுற விளக்குகிருர். கணவர் இறந்ததை அறிந்த அப்பொழுதே கெட்டுயிர்ப்புடன் தம் உயிரை விட்டொழிக்கும் உத்தம மகளிரே தலைக் கற்புடையராவர். கணவர் இறந்தபின் நெருப்பை வளர்த்து அதனுள் நீருள் மூழ்குதற்கு வீழ்வார் போலப் பாய்ந்து மாய்பவர் இடைக்கற்புடையராவர். அங் ங்னமும் செய்யாது மறுமையிலும் அக்கணவருடன் கூடி வாழும் டிேய பேற்றைப் பெறுதற்காக உண்டி சுருக்குதல், நிலத்தில் பாயின்றிப் படுத்தல் போன்ற நோன்புகளே மேற்கொண்டு உயிரைப் போக்கும் இயல். புடையார் கடைக்கற்புடையார் என்று குறிப்பிட்டார்