பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக மகளிர் உயிரினும் சிறந்ததாக ஒம்பப்பெறவேண்டும். அங் காணத்தினும் மானுடையதாகக் கற்பு காக்கப்பெற வேண்டும். கற்பின் பொற்பு தமிழ் நாட்டில் ஆடவர் போற்றிய அரும் பண்பு களாகக் கொடையும் வீரமும் கொண்டாடப்பெற்றன. அவை போன்று மகளிர் போற்றிய மாண்புறு பண்பு களாகக் கற்பினையும் விருந்துபோற்றும் பொற்பினையும் புகலலாம். ' கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை”. என்று தமிழ் மூதாட்டியார் மிகவும் சுருங்கிய சொற் களால் கற்பிற்கு இலக்கணம் வகுத்தார். கணவன் உரையினே மறைமொழியாக மதித்து நடக்கும் மாருத உள்ளமே கற்பென்று அவரால் வரையறுக்கப்பெற் றது. கணவன் கருத்துக்கு மாருக எதனையும் கூரு திருக்கும் இயல்பே பெண்டிர்க்கு அழகாகும் என்று பேசினர் அதிவீரராமர். - - கற்பு என்ற சொல், கற்றல் என்றே பொருள் தரும். கற்ற கல்வியறிவே ஒருவன் அல்லது ஒருத்தி ஒழுக்கத்தைப் பெற்று உயர்தற்குக் காரணமாய் அமையும். 'அறிவின் பயன் ஒழுக்கம்' என்றே ஆன் ருேர் குறிப்பர். மகளொருத்தி மணம் பெறுவதற்கு முன்னர்ப் பெற்ருேரால் ஒழுக்க நெறிகளைக் கற்றுக் கொடுக்கப்பெறுவாள். அவள் மணம்புரிந்து மனே யறத்தைக் கொண்ட காள் முதல் மணந்து கொண்ட கணவனலும் அவன் பெற்ருேராகிய மாமன் மாமிய ராலும் மனேயற நெறிகள் இவையென அறிவுறுத்தப்