பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கோப்பெருந்தேவியர் பாடிய இராமாயணம் சிறையிருந்த கெல்வியாகிய சீதை நல்லாளின் சிறப்பைப் புலப்படுத்தும் செங் தமிழ்க் காவியமாகும். மகளிர் மாண்புகள் இங்ங்னம் பைந்தமிழ் நூல்கள் பலவற்ருல் அறிய லாகும் மகளிர் மாண்பைச் சிறிது ஆராய்வோம். பழமையும் பெருமையும் வாய்ந்த இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் அதன் ஆசிரியர் பேசும் பெண் ணியல்புகளே எண்ணுங்கால் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே தென்னுட்டு மகளிர் பொன்னுட்டு அரம்பையரெனப் போற்றி வணங்கத் தக்க ஏற்ற முடையவராய் விளங்கினர் என்பதை அறியலாம். "கற்பும் காமமும் கற்பால் ஒழுக்கமும் மெல்லியற் பொறையும் கிறையும் வல்லிதின் விருந்துபுறக் கருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்.” என்பது தொல்காப்பியம். கற்பு, காமம், நல்லொழுக் கம், பொறை, நிறை, விருந்துாட்டல், சுற்றம் ஓம்பல் இவை போன்ற இயல்புகள் மகளிர்க்கு மாண்பு தருவன என்று குறித்தார் தொல்காப்பியர். இவற் றுள் தலையாய இயல்பாக முதற்கண் மொழியப்பெற்ற கற்பு, உயிரினும் சிறந்ததாகத் தமிழ் மகளிரால் போற்றப்பெற்றது. ' உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும் செயிர்திர் காட்சிக் கற்புச் சிறந்தன்று.” என்று கற்பின் மாண்பையும் கட்டுரைத்தார் தொல் காப்பியர். மகளிர்க்குரிய காணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நான்கு பண்புகளுள்ளும் நாணம்