பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோப்பெருந்தே வியர் க. தமிழக மகளிர் நிலமடந்தையின் திலகமென விளங்கும் பழங் தமிழ் நாட்டில் தோன்றும் பாவையர் தனிப்பெருஞ் சிறப்பினை உடையவராவர். இவ் உண்மையினைத் தொன்மைத் தமிழ் நூல்களானும் இற்றை நாள் வரைத் தோன்றியுள்ள பிற்காலப் பெருநூல்களானும் கண்ணுரக் கண்டு மகிழும் காட்சியளவையானும் அறிந்து இன்புறலாம். - மகளிர் மாண்பை விளக்குவன தமிழக மகளிரின் தனி மாண்பை அறிதற்குப் பெருந்துணையாக விளங்கும் பழந்தமிழ் நூல்கள் சங்க இலக்கியங்களாகும். தமிழர் வாழ்வுக்குத் தனியிலக் கணம் வகுத்துதவிய தொல்காப்பியர் தம் இலக்கணப் பெருநூலின் பொருளதிகாரப் பகுதியில் மகளிர் இயல்பை விரித்துரைக்கின்ருர், தெய்வப் புலவராகிய திருவள்ளுவரும் உலகப் பொதுமறையாகிய தம் பெரு நூலிலும் தமிழ்ப்பெண்களின் தனிப்பெருமையினே விளக்குகின்ருர் இளங்கோவடிகள் இயற்றிய சிலப் பதிகாரம் கண்ணகியின் கற்பு மாண்பை விளக்கும் கவின்மிகு காவியமாகும். கவியரசராகிய கம்பர்