பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கோப்பெருந்தேவியர் படையும் புறங்காட்டி ஓடுமாறு செய்வேன். அங்ங்னம் யான் செய்யாவிடின், இதோ! என் அருகில் இருக்கும் என் அழகிய மனேவியைப் பிரிந்து வருந்துவேனுக' என்று பூதப்பாண்டியன் வஞ்சினம் கூறினன். ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு அவர்ப்புறம் காணே யிைன், சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக.? என்பது அவன் புலமை நலம் கனிந்த பொன்மொழிப் பாடல் பகுதியாகும். பூதப்பாண்டியன் தேவியாகிய பெருங்கோப் பெண்டும் தன் கணவனுகிய பாண்டியன் மாண்டதும் தீயுள் பாய்ந்து மாய்ந்தாள். அப்பொழுது அவளேத் தடுத்து நின்ற சான்ருேரை அவள் பழித்துப் பாடிய பாடல் சங்க இலக்கியமாகிய புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. அவளது பாடலால் மன்னர் மரபில் தோன்றிய மகளிரின் வீர நெஞ்சமும் கணவனப் பிரிந்து வாழ விரும்பாக் கற்புள்ளமும் கன்கு விளங்கக் காணலாம். அரசியல் ஆய்வுரை கூறும் அமைச்சர் செங்குட்டுவன் தேவியாகிய இளங்கோவேண்மாள் தன் கணவனகிய செங்குட்டுவன் அரசவைக்குச் செல்லுங்கால் தானும் உடன்சென்று அரியணையில் அமர்ந்திருப்பாள். அவைக்கண் கடைபெறும் அரசியல் பற்றிய ஆய்வுரைகளில் தானும் பங்குகொள்வாள். அரசன் குறிப்பும் விருப்பும் அறிந்து தன் கருத்தையும் பொருத்தமாகவும் திருத்தமாகவும் தெரிவிப்பாள். மலைவளம் காணச் சென்ற செங்குட்டுவன் பேரி யாற்றங்கரை மணல் மேட்டில் தங்கியிருந்தான். அப்