பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் குல மகளிர் 11 பொழுது அவனைக் காண வந்த மலைவாழ் வேட்டுவர் தாம் மலைமீது கண்ட மங்கையாகிய கண்ணகியைப் பற்றிய செய்திகளைக் கூறினர். அச்சமயத்தில் செங்குட்டுவன் விருப்பிற்கிணங்க நம்நாடு நோக்கிவந்த பத்தினித் தெய்வத்தைப் பரசல் வேண்டும்' என்று அரசியாகிய வேண்மாள் அறிவித்த கருத்தை அங் வனமே அவன் ஏற்றுப் போற்றின்ை. . இங்ங்னம் அறிவும் திறனும் நிறைந்தவராய் அரச குல மகளிர் விளங்கினர். கற்பில் சிறந்த காரிகைய ராய்க் கணவனது பெருமையைக் காக்கும் பெற்றி யுடன் திகழ்ந்தனர். தம்மை நாடிவரும் பாவலர்க்கு விருந்துாட்டி மகிழும் சிறந்த பண்பினராய் இருந்தனர். இத்தகைய மகளிரைப் பழந்தமிழ் மன்னர்கள் மணந்து அன்பு கனிந்த இன்ப வாழ்வு நடத்தினர். அவர்களில் சில மன்னர் ஒருவரையே யன்றிப் பல மகளிரை மணம் புரிந்து வாழ்ந்ததும் உண்டு. அங்ங்ணம் மன்னர் மணம் செய்த மகளிர் பலராயின் முதற்கண் மண்ங் கொண்ட மாதரசியே கோப்பெருந்தேவி என்று கொண்டாடும் பெருமை கொண்டவளாவள்.