பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. செங்குட்டுவன் தேவி மன்னர் மூவர்-வைப்பு முறை தமிழகத்தைச் சிறப்புற ஆண்ட முடிவேந்தர் மூவரைச் சேர சோழ பாண்டியர் என்று முன்னேர் முறைப்படுத்து மொழிவாராயினர். இங்ங்ணம் இயம்பு வது உலக வழக்கில் மட்டுமன்று. செய்யுள் வழக்கி லும் இம்முறையே எடுத்தாளப்படுகின்றது. புறநா னுாற்றைத் தொகுத்த புலவர், மூவேந்தருள் சேரரைப் பற்றிய செய்யுட்களே முன்னரும் என இருவரைப் பற்றிய பாடல்களைப் பின்னரும் முறைப்படுத்தி அமைத்துள்ளனர். சிறுபாணுற்றுப்படை என்னும் செந்தமிழ் நூலுள்ளும் சேரன், செழியன், செம்பியன் என்னும் முறையே குறிக்கப்பெற்றுள்ளது. தொன்மை வாய்ந்த இலக்கண ஆசிரியராகிய தொல்காப்பியனரும் தமிழ் வேந்தர் மூவரின் மாலைகளைச் சொல்லுங்கால் சேரர் மாலையாகிய பனம்பூ மாலையினேயே முதற்கண் பகர்வாராயினர். 'போங்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானேயர்.” என்பது தொல்காப்பியச் சூத்திரப் பகுதியாகும். சேரரின் தொன்மை இத்தகைய வைப்பு முறையில் சேர சோழ பாண் டியர், சேர பாண்டிய சோழர் என்ற இருவகை காணப் படினும் சேரர் முதற்கண் வைத்து மொழியப்பெறுவ தில் வேறுபாடில்லே. இம் முறையினை நோக்குங்கால் தமிழ் வேந்தர் மூவருள் சேர மரபினர் மற்றை இருவ ரினும் மிகத் தொன்மையானவர் என்பது புலகுைம்.