பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்குட்டுவன் தேவி 13 வடமொழியிலுள்ள மிகப் பழங்காவியமாகிய வான்மீகி இராமாயணத்தில் சீதாதேவியை வானர வீரர் தேடி வருமாறு சுக்கிரீவன் குறிப்பிட்ட இடங்க ளுள் கேரள காடும் முரசீபத்தனமும் காணப்படுகின் றன. கேரளம் என்பது சேரநாட்டைக் குறிக்கும். முரசீபத்தனம் என்பது சேர நாட்டின் பண்டைத் துறைமுகமாகிய முசிரியைக் குறிக்கும். இது முன் ளிைல் பேரியாறு கடலுடன் கலக்கும் இடத்தில் விளங்கிய பெருந்துறைமுக நகரமாகும். சேரனுடைய தலைநகரங்களுள் ஒன்ருகவும் இது கின்று நிலவியதைப் பழங் தமிழ் நூல்களால் அறியலாம். இக்கர் இருந்த இடத்தில் பிற்காலத்துத் தோன்றிய நகரமே கொடுங் கோளுர் என்பது. பிறிதொரு வடமொழிப் பெருங்காவியமாகிய மகாபாரதத்துள்ளும் சேரரைப் பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன. பாரதப்போரில் பாண்டவர் பக்க மிருந்து சேரர் தக்கவாறு துணைசெய்தனர் என்று அவ் இதிகாசத்தால் அறியப்படுகின்றது. உதியஞ்சேரல் என்னும் சேரவேந்தன் பாரதப்போர் முடியுங்காறும் படைகட்குப் பெருஞ்சோறளித்துப் பேணினன் என்று தமிழ் நூல்களில் போற்றப்படுகிருன். இதனைப் பழக் தமிழ்ப் புலவராகிய முரஞ்சியூர் முடிநாகராயர் என் பார் அப்பெருஞ்சோற்று உதியன் சேரலாதன நேரில் கண்டு பாராட்டிப் பாடிய பாடலால் அறியலாம். " அலங்குளைப் புரவி ஐவரொடு சினே இ நிலந்தலக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்.”