பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 14 கோப்பெருந்தேவியர் என்பது அப்புலவரின் நலங்கெழுமிய வாக்காகும். இச் செய்தியினை இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகின்றனர். " ஓரைவர் ஈரைம் பதின்மர் உடன்றெழுந்த போரில் பெருஞ்சோறு போற்ருது தானளித்த சேரன்.” என்பது அவர் வாக்கு. ஓரைவர் என்பார் பாண்டவர் ஐவர். ஈரைம்பதின்மர் என்பார் கெளரவர் நூற்றுவர். இவ் இரு திறத்தாரும் சீறியெழுந்த போரில் இரு திறத்துப் படைவீரர்க்கும் வேண்டுமட்டும் பெருஞ் சோற்றை விரும்பியளித்து அரும்புகழ் பெற்ருன் சேரன் என்று ப்ாராட்டினர் சிலப்பதிக்ார ஆசிரியர். செங்குட்டுவன் தந்தை இங்ங்னம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே புலவர் பாடும் புகழ்பெற்று இலகிய சேரர் மரபில் நெடுஞ்சேரலாதன் என்னும் முடிவேந்தன் ஒருவன் விளங்கினன். அவன் இமயவரம்பன் என்று புலவர்கள் ஏத்தும் சீர்த்தி பெற்று இலங்கினன். குமரியொடு வட இமயத்து ஒருமொழிவைத்து உலகாண்ட சேரலாதன்' என்று இப் பெருவேந்தனே இவன்றன் மைந்தராகிய இளங்கோவடிகள் குறிப்பிடுகின்ருர். இம் மன்னர் பெருமான் இமயம்வரை சென்று, வடநாட்டு வேக் தரை வென்று, தன் இசைக்கொடியினே நாட்டினன். இத்தகைய நெடுஞ்சேரலாதனுக்குக் கோப்பெருங்தேவி யாய் அமைந்தவள் சோழன் மணக்கிள்ளியின் மகள் நற்சோணை என்னும் நல்லாள். அன்னுள் மணிவயிற் றில் தோன்றிய மைந்தர் இருவருள் மூத்தவனே செங் குட்டுவன் என்னும் செந்தமிழ்ப் பெருவேந்தன். அவ