பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்குட்டுவன் தேவி 15 லுக்கு உடன்பிறந்த தம்பியரே இளங்கோவடி களாவர். செங்குட்டுவன் தேவி பேராண்மை மிக்க சேரப் பெருவேந்தனகிய செங் குட்டுவனுடைய பெருந்தேவியாகத் திகழும் பேறு பெற்றவள் இளங்கோவேண்மாள் என்பாள். வதுவை: வேண்மாள் மங்கல மடந்தை' என்று இவளேச் சிலப் பதிகாரம் குறிப்பிடுகின்றது. இதல்ை இப்பெருங் தேவி வேளிர் குலத்தைச் சார்ந்தவள் என்பது விளங் கும். இவள் ஒருத்தியையன்றிச் செங்குட்டுவன் வேறு மகளிரை மணந்ததாகத் தெரியவில்லை. அரசியும் அமைச்சும் - இளங்கோவேண்மாள் செங்குட்டுவன் சிந்தை யினேக் கவரும் சீரிய பேரழகு படைத்த பெண்ணுக விளங்கியதோடன்றிக் கூரிய நுண்ணறிவு கொண்டவ. ளாகவும் விளங்கினுள். அவளுடைய அறிவுத் திறனைப் பலகால் ஆய்ந்துணர்ந்த வேந்தர் பெருமாளுகிய செங்குட்டுவன் அவளைத் தன் அமைச்சருள் ஒருவ ராகவே கருதின்ை. ஆதலின் அவன் தன் அரசவைக் குச் செல்லும்போதெல்லாம் தன் கோப்பெருங்தேவி யாகிய இளங்கோவேண்மாளேயும் உடனழைத்துச் செல்லலானன். அரசவையில் அவளேத் தன் அரியா சனத்திலேயே உடனிருத்தி உளங்குளிர்ந்தான். இதனை இளங்கோவடிகள், 'இளங்கோவேண்மாள் உடனிருந் தருளி' என்றே குறிப்பிடுவார். செங்குட்டுவன் தன் கோப்பெருந்தேவியுடன் அத்தாணி மண்டபத்திற்கு அணிமிகு பெருங்கோலம்