பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கோப்பெருந்தேவியர் தாங்கி இன்னியங்கள் முழங்க எழுந்தருளுவான். அப்போது அவன் வரும் வழியெல்லாம் அரண்மனையி லுள்ள அரங்குகளில் கூத்தர்கள் பல்வகைக் கூத்துக் களே நிகழ்த்தி மகிழ்வூட்டுவர். இருவரும் அக் காட்சி களேக் கண்ட பெருமகிழ்வுடன் அத்தாணியில் சென்று அமர்வர். அங்கு அமைச்சர் முதலான அரசியல் சுற்ற முடன் மந்திராலோசனை புரியும்போது கோப்பெருங் தேவியும் தன் கருத்தை எடுத்தியம்பும் உரிமையினைச் செங்குட்டுவன் அவட்குக் கொடுத்திருந்தான். இதனல் இளங்கோவேண்மாளின் துண்ணறிவு இனிதில் புல வைதாகும். செங்குட் டுவன் மல்வளம் காணச் செல்லுதல் சேரர் தலைநகரமாகிய வஞ்சிக்கண் மன்னன் வதியும் மாளிகை 'இலவந்திகை வெள்ளிமாடம் எனப் படும். அம் மாளிகையில் சேர மன்னனுகிய செங்குட்டு வன் தன் தேவியுடன் வாழும் நாளில் மஞ்சு குழும் சோலைகளையுடைய மலைவளத்தைக் கண்டுகளிப்போம்" என்று கருதினன். தேவ மாதருடன் விளையாட விரும்பிய தேவேந்திரன் தனது ஐராவதத்தில் அழகுற அமர்ந்து ஆரவாரத்துடன் செல்வது போலச் செங் குட்டுவனும் தன் பட்டவர்த்தனக் களிற்றின்மேல் அமர்ந்து பரிவாரங்கள் புடைசூழப் புறப்பட்டான். திருமாலின் மார்பிடையே திகழும் முத்தாரம் போன்று பல்வகை மரங்களால் அழகுடன் ஒளிரும் மலையினை ஊடறுத்துக் கொண்டு இழியும் பேரியாறு என்னும் ஆற்றங்கரையின் மணல் நிறைந்த மேட்டிலே சென்று தங்கினன். அவனுடன் கோப்பெருங்தேவியாகிய இளங்கோவேண்மாளும் தம்பியாராகிய இளங்கோவடி