பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்குட்டுவன் தேவி 17 களும் அவைப் புலவராகிய சீத்தலைச் சாத்தருைம் அமைச்சர் தலைவனகிய அழும்பில்வேளும் படைத் தலைவனகிய வில்லவன்கோதையும் இன்னும் பிற அரசி யல் சுற்றமும் ஆங்கு வந்து பாங்குறத் தங்கினர். மலைநாட்டு மக்கள், மன்னனைக் காண்டல் அக்காலத்தில் குரவை ஆடும் குறமகளிர் பாட லும், மலைக்கண் முருகபூசை செய்யும் வேலனது பாட லும், தினையிடிக்கும் தெரிவையரின் வள்ளேப் பாட் டும், தினைப்புனங்களினின்று எழுகின்ற ஒலியும், தேனெடுக்கும் குறவர்களின் குரல் முழக்கும், அருவி ஒலியும், புலியோடு போராடும் பொருகளிற்றின் பெரு முழக்கும், தினைப்புனப் பரண்களில் இருக்கும் பாவை யர் கூவும் ஒலியும், குழியில் வீழ்ந்த வேழங்களைப் பாகர் பழக்கும் ஓசையும் ஆங்குச்சென்ற படைகளின் ஆர வாரத்துடன் கலந்து ஒலித்தன. இந் நிலையில் மலே வாழ் வேட்டுவர் பலர் ஒருங்கு திரண்டு மலேயிடத்துக் .கிடைக்கும் அரிய பொருள்களாகிய யானைத் தந்தம், அகில், சந்தனம், கவரிமான் மயிர், தேன்குடம், சிந்துரக்கட்டி, அஞ்சனம், அரிதாரம், ஏலம், மிளகு, கூவை, கவலை, தேங்காய், மாங்கனி, பலாக்கனி, கரும்பு, கமுகின் குலே, வாழைக்குலே, சிங்கம்-புலி-யானை-குரங்குகரடி ஆகியவற்றின் குட்டிகள், மலேயாடு, மான்மறி, கத்துாரிக் குட்டி, கீரிப்பிள்ளை, தோகைமயில், புனுகுப் பூனை, காட்டுக்கோழி, கிளிப்பிள்ளை முதலானவற்றைத் தம் காட்டு மன்னனுக்குக் கையுறையாகத் தலைமேல் தாங்கிச் செங்குட்டுவன் திருமுன் வந்து நின்றனர். வேந்தனைக் கண்ட வேட்டுவக் கூட்டத்தார் தாம் தலைமேல் சுமந்து வந்த மலைபடு பொருள்களேயெல்