பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கோப்பெருந்தேவியர் லாம் அவன் திருமுன் வைத்து, ஏழ் பிறப்படியேம்! வாழ்க! நின் கொற்றம்' என்று வாழ்த்தி அவன் அடி களில் விழுந்து பணிந்தனர். செங்குட்டுவன் தன்னேக் காண வந்த மலைநாட்டு மக்களுக்கு மலர்ந்த முகம் காட்டித் திருமுடி அசைத்து நல்வரவு கூறினன். பின்னர், விேர் வாழும் மலைநாட்டு நிகழ்ந்த சிறப்பு ஏதும் உளதோ ?' என்று அன்புடன் வினவினன். அது கேட்ட வேட்டுவர் தலைவன் அம் மலைநாட்டு நிகழ்ந்த வியத்தகு நிகழ்ச்சியை வேந்தனுக்கு விளக்க லான்ை. கண்ணகி காட்சியைக் கட்டுரைத்தல் 'வேந்தர் வேந்தே! யாங்கள் வாழும் மலைக் கண்ணே ஒரு வேங்கை மரத்தின் நீழலில் மங்கை யொருத்தி ஒரு மார்பினை இழந்தவளாய்ப் பெருந்துய ரோடும் வந்து நின்ருள். அச்சமயத்தில் வானத்தி னின்று இறங்கிய விமானத்தில் தேவர்கள் பலர் ஆங்கு வந்துற்றனர். அங்கு நின்ற மங்கைக்கு அத்தேவர்கள் அவள் கணவனேக் காட்டி அவளேயும் உடன் அழைத் துக்கொண்டு எங்கள் கண்முன்னரேயே விண்ணுலகம் சென்றனர். அம் மங்கை நல்லாள் எங்குப் பிறந்த வளோ ? யார் மகளோ ? அறியோம். இது பெரிய தொரு வியப்பாய் இருந்தது. தேவரீர் திருகாட்டில் நிகழ்ந்த இச் செய்தியினைத் தாங்கள் தெரிந்தருளல் வேண்டும்.” சாத்தனர் செய்தியை விளக்குதல் இங்ங்னம் வேட்டுவர் தலைவன் விளம்பிய செய்தி களே எல்லாம் உடனிருந்து உற்றுக் கேட்ட முற்றுணர்