பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்குட்டுவன் தேவி 19 புலவராகிய மதுரைச்சாத்தனர் அவ்வியத்தகு நிகழ்ச்சி யைப் பற்றி வேந்தனுக்கு விளக்கத் தொடங்கினர். அப் புலவர் மதுரையில் கோவலன் கொலையுண்டது முதலாய நிகழ்ச்சிகளே நேரில் கண்டறிந்தவ ராதலின் செங்குட்டுவனை நோக்கி, அரசர் பெருமானே! அது நிகழ்ந்தவாற்றை யான் நன்கு அறிவேன் ' என்று சொல்லத் தொடங்கினர். ' காவிரிப்பூம்பட்டினத்து வணிகன் கோவலன் என்பான் தன் மனைவி கண்ணகியின் காற்சிலம்பை மதுரையில் விற்றற்கு வந்தான். அவனைப் பாண்டியன் நெடுஞ்செழியன் தன் தேவியின் சிலம்பைத் திருடிய கள்வன் என்று கொலைபுரிவித்தான். அதனை அறிந்த கண்ணகி கடுஞ்சினம் கொண்டு பாண்டியன் அவை யில் வழக்காடி வென்ருள். மற்ருெரு சிலம்பைப் பாண்டியன் தேவி முன் வீசி எறிந்து வஞ்சினம் கூறி ள்ை. மன்னன் மாளிகையினின்று வெளிப்போந்து தனது ஒரு மார்பைத் திருகி வானில் வீசிள்ை. அதனி னின்று எழுந்த கொழுங் தீயால் மதுரை மூதூரைச் சுட்டெரித்தாள். கண்ணகியின் வழக்கைக் கேட்ட நெடுஞ்செழியன் தான் செய்த கொடுங்கோன்மைக்கு ஆற்ருது அரியணைமிதே விழுந்து உயிர்துறந்தான். அவன் கோப்பெருங்தேவி அக் கடுந்துயர் பொருளாய் 'மன்னவன் செல்வுழிச் செல்க யான் எனத், தன்னுயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல்' உடனுயிர் நீத்தாள். கண்ணகியோ பாண்டியனது கொடுங் கோன்மை இத்தன்மையது என்பதைப் பெருவேந்த கிைய நின்னிடத்துக் கூறவந்தவள்போலத் தனக்குரிய சோழநாடு செல்லாது நின்டுை புகுந்தாள். அரசே! நின் கொற்றம் சிறப்பத்ாக!'