பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கோப்பெருந்தேவியர் செங்குட்டுவன் செப்பிய ஆறுதல் இங்ங்னம் சீத்தலைச் சாத்தனர் செப்பிய செய்தி களைக் கூர்ந்து கேட்ட வேந்தர் பெருமானகிய செங் குட்டுவன் பெரிதும் சிங்தை நொந்தான். பின் சாத்த ைைர கோக்கிப், ' புலவர் பெருமானே! பாண்டியன் செங்கோன்மையில் வழுவிய செய்தி எம்போன்ற மன்னர் செவிகளில் விழுவதன் முன்னர் உயிர்த்ே தான். அச்செயல் தீவினையால் வளைக்கப்பட்ட அவனது கோலை உடனே நிமிரச்செய்து செங்கோலாக்கி விட்டது. மன்னுயிர் காக்கும் மன்னர் குடியில் பிறத்தல் இன்னலேயன்றி இன்பம் சிறிதும் இல்லை' என்று கூறி உள்ளம் தேறினன். செங்குட்டுவன் தேவியை வினவுதல் - பின்னர்ச் செங்குட்டுவன் தன் அருகிருந்த பெருங் தேவியாகிய இளங்கோவேண்மாளின் உளக்கருத்தை அறிய விரும்பினன். ' உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும் செயிருடன் வந்தஇச் சேயிழை தன்னினும் கன்னுதல்! வியக்கும் நலத்தோர் யாரென.' கணவனகிய பாண்டியனுடன் தன்னுயிரை நீத்த அவன் கோப்பெருந்தேவியும் சினத்துடன் கம் சேர காடு நோக்கிவந்த கண்ணகியும் ஆகிய இவ் இருபெரும் பத்தினியருள்ளே வியந்து போற்றும் சிறந்த கற்புடை யார் யாவர்? என்று உசாவினன். பெருந்தேவியின் மறுமொழி கோப்பெருந்தேவி கணவனது வினவிற்கு மிகவும் ஆய்ந்து தகவுற மறுமொழி பகர்ந்தாள்.