பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்குட்டுவன் தேவி 2}. " காதலன் துன்பம் காணுது கழிந்த மாதரோ பெருந்திரு உறுக வானகத்து, அத்திறம் நிற்க;கம் அகல்நாடு அடைந்த இப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்.' காதற் கணவனது துன்பத்தைக் காணுது உயிர்த்ேத பாண்டியன் பெருந்தேவி வானுலகத்தே பெருந்திருப் பெறுவாளாக நம் நாட்டை நோக்கி வந்த பத்தினித் தெய்வமாகிய கண்ணகியை நாம் வழிபடுதல் கடனுகும் என்று கட்டுரைத்தாள் கோப்பெருந்தேவி. தெய்வப் புலவராகிய திருவள்ளுவர் தமிழகப் பெண்ணிற்குத் தக்கதோர் உயர்ந்த இலக்கணத்தை வகுத்துள்ளார். "தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர் விலாள் பெண்.' என்பது அவர் வாய்மொழி. பெண்ணுவாள் கற்பினுல் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். தன்னை மணந்து கொண்ட கணவனே உண்டி முதலியவற்ருல் நன்ருகப் பேண வேண்டும். இருவர் தம் புகழையும் இனிது காக்க வேண்டும். தனக்குரிய நற்குண நற்செயல்களில் தவரு தவளாக இருத்தல் வேண்டும். கோப்பெருந்தேவியும் கண்ணகியும் இங்கன்ம் வள்ளுவர் வகுத்த இலக்கணத்தில் பாண்டியன் கோப்பெருந்தேவிக்கு ஒரு சிறு குறை அமைந்துவிட்டது. அவள் தன் கணவனுக்கு ஏற்பட்ட 'கடுங்கேர்லன்' என்ற பழியை அகற்றவில்லை. கண்ணகியின் சிலம்பைத் தன் சிலம்பென அறியாது விரும்பிக் கணவன் பெரும்புகழ் நீங்குதற்கும் அவளே காரணமாயினுள். கண்ணகியோ தன் கணவனுக்கு