பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டனத்தியின் தேவி 27 கொண்டான். அவன் தன் தாய்மாமனும் தமிழ்ப் புலவர் கோமானுமாகிய இரும்பிடர்த்தலேயார் வாயி லாகத் தன் விருப்பினைத் தெரிவித்தான். அத்தியும் அதற்கு இசையவே கரிகாலன் மகளாகிய ஆதிமந்தி அவன்பால் நாட்டியக்கலையைப் பயின்று தேர்ந்தாள். அங்காளில் அத்தியும் மருதியும் ஆதிமந்தியும் ஆடற் கலையில் இணையற்றவராய் நாட்டிய மும்மணிகளென நாட்டினர் போற்ற விளங்கினர். மருதியின் நாட்டிய மாண்பு ஆதிமந்தியின் தக்தையாகிய கரிகாலன் புகாரில் தங்கிச் சோழநாட்டின் கீழைப்பகுதியை ஆண்டு வந்தான். அந் நாளில் செங்கனன் என்னும் சோழ வேந்தன் உறையூரில் தங்கி அதைச் சூழ்ந்த பகுதிகளை ஆண்டு வந்தான். இச் செங்களுனுக்கு நல்லிடிக்கோன் என்னும் செல்வமகன் ஒருவன் இருந்தான். அவன் அறிவினும் ஆற்றலினும் அரசியல் திறத்தினும் சிறந்து விளங்கினன். சிவபத்தியின் மிக்க இச் செல்வன், கரூர்த் திருக்கோவிலில் எழுந்தருளிய பசுபதீச்சுரருக்கு ஆண்டுதோறும் நிகழும் பெருவிழாவை ஒருகால் மிகவும் சிறப்புற நடத்தினன். அவ் விழாவில் நாகப்பட் டினத்து நாட்டிய கங்கை மருதியின் நாட்டிய அரங்கு கடைபெறுமாறு செய்தான். சோழன் செங்களுன் பெற்ற செல்வனகிய கல்லிடிக்கோன், மருதியின் உரு வெழிற் சிறப்பிலும் உயர்ந்த நாட்டியத் திறனிலும் தனது உள்ளத்தைப் பறிகொடுத்தான். உணர்வழிந்து காதல் கொண்டு காம மயக்கத்திலாழ்ந்தான். மருதி யின் நாட்டிய மாண்பைக் கண்டு மக்களெல்லாம் மிக்க மகிழ்ச்சியுற்றனர்.