பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கோப்பெருந்தேவியர் 'நல்லாரைக் காண்பதுவும் நன்றே என்று நவின் றருளினர் ஒளவையார். நல்லார் குழாத்தில் ஒருவ கைத் திகழ்ந்த அத்தியைக் காண்பதாலேயே அரு நோய்கள் கெடுமாயின் அவனது மாட்சியை என் னென்பது ! மன்னனும் மருதியும் அந்நாளில் நாகப்பட்டினத்தைச் சார்ந்த நெய்தல் நிலத் தலைவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு உருவிலும் அறிவிலும் மிக்க மருதி யென்னும் மகள் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு காட்டியக்கலேயைக் கற்பிக்க வேண்டுமெனத் தந்தையாகிய நெய்தல் நிலத் தலைவன் விரும்பின்ை. சேர வேந்தனகிய ஆட்டனத்தி காட்டியக்கலையை ஊட்டுவதில் வல்லவன் என்பதை நல்லார்வாய்க் கேட்டறிந்தான் அந் நாகப்பட்டினத்துத் தலைவன். உடனே அவன் தன் மகளே வஞ்சிக்கே அனுப்பிச் சேரன்பால் கலேபயிலச் செய்தான். மருதி இயலிசைகளில் வல்லவளாக இருந்தமையால்காட்டியக் கலேயை எளிதில் பயின்று ஆடலரசியாகத் திகழ்ந்தாள். அவளது ஆடல், பாடல், அழகு அனைத்தினும் கருத் தைப் பறிகொடுத்த ஆட்டனத்தி அவளைக் காதலித் தான். கலையில் வல்ல வேந்தனைக் கலைபயின்ற மருதி யும் விரும்பிள்ை. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். ஆதிமந்தியின் அருந்தொடர்பு . ஆட்டனத்தியின் ஆடல்திறனேக் கேட்டறிந்த சோழவேந்தகிைய கரிகாலன், தன்மகளாகிய ஆதிமந்தி என்பாளுக்கும் காட்டியக்கலே பயிற்றுவிக்க நாட்டம்