பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டனத்தியின் தேவி 25 இயல்பு என்றும் குன்ருதிருக்க வேண்டும் என்று விரும்பினர். அதல்ை அவர்தம் உள்ளங் குளிரத் தெள்ளமுதப் பாவொன்ருல் வாழ்த்தினர். " எருமை யன்ன கருங்கல் இடைதோறு ஆனிற் பரக்கும் யானேய முன்பின் காணக நாடனே நீயோ பெரும ! நீயோ ராகலின் நின்னென்று மொழிவல், அருளும் அன்பும் நீக்கி நீங்கா கிரயம் கொள்பவரொடு ஒன்ருது காவல் குழவி கொள்பவரின் ஒம்புமதி அளிதோ தானே அது பெறல் அருங் குரைத்தே.” -புறநானுாறு : டு எருமையைப் போன்ற கருமையான பாறைகள் நிறைந்த இடங்தொறும் பசுக்களைப்போல யானைகள் உலவும் வலிமை வாய்ந்த காட்டின் நடுவே அமைந்த நாட்டினேயுடையாய் பெருமானே ! நீ பெறுதற்கரிய பேராற்றலையும் கல்லியல்பையும் இயல்பாகவே பெற். றுள்ளாய். இவ் அரிய இயல்பு நின் பால் என்றும் நிலவ வேண்டும் என்ற விருப்புமிக்க கினேப்பால்கினக்கு ஒரு செய்தியைச் சொல்லுவேன். அருளும் அன்பும் நீக்கிய வன்புடைய நெஞ்சத்தால் நரகினே வரவேற்கும் கொடியருடன் கூடாமல் கின் காட்டைக் குழந்தையை வளர்க்கும் தாயரைப்போல நேயமுடன் காப்பாயாக! அத்தகைய காவலே ஆன்ருேரும் போற்றும் அருமை யுடையதாகும்.' இங்ங்னம் அத்தியைச் சித்தங்குளிர வாழ்த்திச் சீரிய நல்லுரை பகர்ந்த நரிவெரூஉத்தலையார் தாம். பெற்ற இன்பம் பிறரும் பெறவேண்டும் என்ற பேருள்ளத்தைத் தம் பாட்டால் பாரறியக் காட்டி னக் கோ.-3