பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கோப்பெருந்தேவியர் நோய்களைப் போக்கும் நன்மருந்து போல்வான் ; நாட்டியக்கலையினைத் தான் கற்றுத் தேர்ந்ததோடு கில்லாது மற்றையோர்க்குக் கற்றுக்கொடுப்பதிலும் வல்லவகை விளங்கினன். அதனுலேயே பிறரை ஆட்டும் இயல்புடையாளுகிய அத்தியை ஆட்டுவான்' என்று போற்றினர். அச்சொல்லே ஆட்டன்' என்று மருவியது. அதுவே இந்நாளில் கட்டுவன்’ என்று திரிந்து வழங்குகின்றது. புலவர் நோய் போக்குதல் இவ் அத்தியின் காலத்தில் விளங்கிய அருந்தமிழ்ப் புலவராகிய நரிவெரூஉத்தலேயார் என்பார் நாட்டினர் வெறுக்கும் தோற்றமுடையவராய் இருந்தார். அவ. ருடைய தலையைக் காணும் கரியும் வெருவியோடும் போலும்! அத்தகைய இழிந்த தோற்றத்துடன் இருந்த பெருந்தமிழ்ப் புலவரை, கல்லோர் பலர் ஆட்டன் அத்தியைச் சென்று காணுமாறு துாண்டினர். அங்ங்னமே நல்லிசைப் புலவராகிய நரிவெரூஉத்தலே யாரும் சேரன் தலைநகரமாகிய வஞ்சியைச் சார்ந்து மருந்தனைய மன்னகிைய அத்தியைக் கண்டார். அவனது அருட்பார்வை பட்ட அப்பொழுதே புலவர் நல்லுடம்பும் பொலிவுமிக்க தோற்றமும் பெற்ருர்" அதனுல் பெருமகிழ்வுற்ற புலவர், அத்தியை அக மகிழ்ந்து போற்றினர். அதனேக் கண்ணுற்ற மன்னன் அன்புடன் வரவேற்று உபசரித்து அவரது வரலாற்றை உசாவி அறிந்தான். நரிவெரூஉத்தலேயார் நல்வாழ்த்து அத்தியின் காட்சியால் அருநோய் நீங்கிய நரிவெரூஉத்தலையார் அவன்பால் அமைந்த அரிய