பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. ஆட்டனத்தியின் தேவி அத்தியின் அருமை 'வில்லுக்கு வீரன் சேரன், சொல்லுக்கு வீரன் கீரன்’ என்பது முன்னேர் வழங்கிய பழமொழியாகும். இப் பழமொழியால் சேர வேந்தர் வீரத்தில் சிறந்தவர் என்பது இனிது புலனாகும். இத்தகைய சேர மரபில் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் நாடகக் கலையில் வல்லவனுகிய கல்லரசன் ஒருவன் இருந்தான். அவன் அத்தி என்னும் அரும்பெயருடையான். அத்தி என்ற சொல்லுக்கு யானே' என்பது பொருள். களிறு போன்ற கடுந்திறல் வீரனுதலின் அங்ங்ணம் பெயர் பெற்ருன்போலும் ! அவன் நாடகக்கலையில் பெற்ற கற்றிறத்தால் ஆட்டன் அத்தி' என்றே போற்றி அழைக்கப்பெற்ருன். இத்தகைய அத்தி யென்னும் அரசர்பெருமான் ஆற்றல் மிக்க ஏற்றினைப் போன்ற எழில் கடையுடை யான். பருத்துத் திரண்ட தோள்களேயுடையான். அடர்ந்து இருண்டு சுருண்ட தலைமயிருடையான், கலீர் கலீரென்று ஒலிக்கும் கவின்மிகு கழல்புனைந்த கால் களையுடையான். கரிய கச்சினை அரையிலே கட்டி யவன். பசும்பொன்னல் செய்த பாண்டில் மணிகளே அக் கச்சின்மீது அழகுற அணிந்தவன். வண்ண மலர் களால் தொடுக்கப்பெற்ற வனப்பு மிக்க மாலையினை மார்பிலே தரித்தவன். திேயிலும் வீரத்திலும் நேரில் லாதவன். சிவபத்தியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவன். இயற்றமிழிலும் இசைத்தமிழிலும் வல்லவன் : சிங்தை யின் ஒருமைப்பாட்டால் மந்திர ஆற்றல் கைவரப் பெற்றவன் தன் பார்வையாலும் பரிசத்தாலும் பல