பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கோப்பெருங்தேவியர் தாள் ; பின் ஒருவாறு உள்ளம் தேறிள்ை. என்னேக் காதலித்த மன்னன் அத்தி மனம் மாறி மற்ருெரு பெண்ணே மணந்து கொண்டாலும் யான் அங்ங்னம் செய்ய விரும்பேன்; மறு பிறவியிலேனும் அவனே மணவாளனுகப் பெறுதற்குப் பெருந்தவம் கிடப்பேன்’ என்று மருதி உறுதி பூண்டாள். மனத்தில் உறுதி கொண்ட மருதி, தான் கருதி யுள்ள முடிவைத் தன் தங்தைக்குத் தெரிவித்தாள். கடற்கரை அருகே கன்னிமாடம் ஒன்று கட்டித்தர வேண்டினள். அவனும் மகளின் விருப்பிற் கிணங்கிக் கடற்கரையில் கன்னிமாடம் ஒன்றை அமைத்துக் கொடுத்தான். அதில் மருதி சென்று தங்கி மாதவம் செய்துகொண்டிருந்தாள். காவிரியில் புதுப்புனல் விழா சோழ நாட்டைப் புனல்நாடாகப் பொலிவுறச் செய்யும் காவிரியாற்றில் புதுவெள்ளம் வரும் பொழுது அங்காட்டு மக்கள் புனல்விழாக் கொண்டாடி மகிழ்வர். ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் நடைபெறும் பதினெட்டாம் பெருக்கு என்னும் விழாவே அப் புதுப் புனல் விழாவாக விளங்கியிருக்க வேண்டும். இவ் விழா நாளில் காவிரியின் இரு கரைகளிலும் உள்ள ஊர்களில் வாழும் மக்கள் மிக்க மகிழ்வுடன் ஆற்று வெள்ளத்தில் குதித்து ஆடி இன்புறுவர். ஆற்றல் மிக்க இளைஞர் பலர் தம் ஆண்மை தோன்ற ஆற்று நீரை எதிர்த்து நீந்திப் போட்டியிட்டு ஆடி மகிழ்வர். இக் காட்சிகளை யெல்லாம் மன்னன் முதல் மக்கள் அனைவரும் கரையில் இருந்து கண்டு களிப்பர்.